சென்னை புளியந்தோப்பு மோதிலால் தெரு குருசாமி நகர் 2-வது தெருவில் குப்பை கழிவுகள் வீசப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இப்படி வீசப்படும் குப்பைகள் தேங்கி, குப்பை மேடாக காட்சியளிப்பதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுவதற்கும் வழிவகுக்கிரது. சம்பநதப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பை கழிவுகளை அகற்ற தீர்வு காண வேண்டும்.