சென்னை சேப்பாக்கம் வெங்கடேச கிராமணி தெருவில் மூடப்பட்ட மதுபான கடை எதிரில் நீண்ட நாட்களாக குப்பைகள் கொட்டப்படுவது தொடர்ந்து வருகின்றது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் அலங்கோலமாகவும் காட்சியளிக்கிறது. மேலும் சமூகவிரோத செயல்கள் நடைபெறும் இடமாகவும் மாறி வருகின்றது. இதன் அருகே மகளிர் பள்ளி மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளதால் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பில்லாத இடமாக இருக்கின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த இடத்தை சுத்தம் செய்து, இதுபோன்ற சமூக சீர்கேடுகள் நடைபெறாதவாறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டுகிறோம்.