
காஞ்சீபுரம் மாவட்டம் முருகப்பா சாலையில் கால்வாய் அருகே குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி, தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைகளை அகற்றி கால்வாயில் தங்கு தடையின்றி தண்ணீர் செல்வதற்கு வழி வகுக்க வேண்டும்.