சென்னை சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட் பின்புறம் அமைந்துள்ள ஆர்.பி.சி.சி. நடுநிலைப்பள்ளியின் முன்பகுதி குப்பைகள் கொட்டும் இடமாக மாறியுள்ளது. இதனால் மாணவர்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பள்ளி அருகில் குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.