நாமக்கல் நகரின் மைய பகுதியில் நகரை அடையாளம் காட்டும் வகையில் மலைக்கோட்டை அமைந்து உள்ளது. இதையொட்டி கமலாலய குளம் உள்ளது. இந்த குளத்தில் சமீபத்தில் பெய்த மழையால் அதிகஅளவு தண்ணீர் தேங்கி உள்ளது. இது கடல்போல் காட்சி அளித்தாலும், கரையோர பகுதிகளில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் மிதக்கின்றன. இவற்றை அகற்ற நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.