திருவாரூர் மாவட்டம் திட்டச்சேரி கடைவீதி பகுதியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மூக்கை மூடிய படி சென்றுவருகின்றனர். மேலும், குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?