குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-08-27 15:19 GMT

பெருந்துறையில் இருந்து சென்னிமலை செல்லும் வழியில் ஈங்கூரின் முகப்பு பகுதியில் ஏராளமான குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசி வருகிறது. நீண்டகாலமாக இந்த குப்பைகள் அப்புறப்படுத்தப்படாமல் இருக்கின்றன . இதற்கு அருகிலேயே அரசு பள்ளிக்கூடம் மற்றும் கடைகள் அமைந்திருக்கின்றன. மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும் சாலை என்பதால் விரைந்து குப்பைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்