கட்டிட பொருட்களால் பாதசாரிகள் அவதி

Update: 2023-08-16 17:13 GMT
பெங்களூரு ஜெயநகரில் பெங்களூரு இன்டர்நேசனல் பள்ளிக்கூடம் முன்பகுதியில் நடைபாதை உள்ளது. அந்தப் பகுதியில் சிமெண்ட் சாலை பணி நடந்தது. தற்போது பணி முடிந்து ஒரு மாதம் ஆகிறது. ஆனால் பணிகளுக்காக போடப்பட்ட மணல், கட்டிட இடிபாடுகள் அப்படியே கிடக்கிறது. இதனால் அந்த நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் பாதசாரிகளும், பள்ளி மாணவ-மாணவிகளும் அந்த நடைபாதையை பயன்படுத்தாமல் சாலையில் இறங்கி செல்லும் நிலை உள்ளது. எனவே அந்த நடைபாதையை ஆக்கிரமித்து கிடக்கும் கட்டிட பொருட்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்