சாலையில் சிதறி கிடக்கும் குப்பை

Update: 2023-08-13 17:02 GMT

அரியாங்குப்பம் அடுத்த காக்காயந்தோப்பு - அரிக்கன்மேடு செல்லும் சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுகிறது. இவை காற்றில் பறந்து சாலையில் சிதறி கிடக்கிறது. இது வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும், சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையிலும் உள்ளது. குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்