தர்மபுரி மாவட்டம் அரூர் நகரில் பைபாஸ் ரோட்டில் அரசு மாணவர் விடுதி உள்ளது. அந்த விடுதியின் முன்புறம் சாக்கடை வாய்க்காலில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே மாணவர்களின் நலன் கருதி குப்பைகளை அகற்றவும், வேறு இடத்தில் குப்பை தொட்டி வைத்து அதில் குப்பை கொட்டவும் அரூர் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சுந்தரமூர்த்தி, அரூர்.