சுகாதார சீா்கேடு

Update: 2023-07-30 16:14 GMT

ஈரோடு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானம் மற்றும் குடியிருப்பு பகுதியில் குப்பை தொட்டி வைக்கப்பட்டு உள்ளன. இங்கு கோழி கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் குப்பை நிரம்பி வழிகிறது. துர்நாற்றம் வீசி வருகிறது. சுகாதார சீா்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்புள்ளது. குப்பையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பாா்களா?

மேலும் செய்திகள்