கொடுமுடி அருகே உள்ள சாலைப்புதூரில் இருந்து குப்பம்பாளையம் மின்வாரிய அலுவலகம் வரை செல்லும் சாலை குண்டும், குழியுமான நிலையில் மிகவும் மோசமாக காணப்படுகிறது. இந்த ரோடு வழியாக பொதுமக்கள், பள்ளிக்கூட மாணவ-மாணவிகள், முதியவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு சென்று வருகின்றனர். மழை பெய்தால் ரோட்டில் உள்ள குழிகளில் தண்ணீர் தேங்கி ரோடு மேலும் சேதமடைந்து வருகிறது. உடனே சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.