கடமலைக்குண்டு கிராமத்தில் இருந்து அகற்றப்படும் குப்பைகள் மேகமலை வனச்சரக அலுவலகம் அருகே குமணன்தொழு சாலை ஓரமாக கொட்டப்பட்டு வருகிறது. அவ்வபோது இதில் தீ பற்ற வைக்கப்படுவதால் அதிலிருந்து அதிக அளவில் புகை வெளியேறுகிறது. இந்த புகை குமணன்தொழு பிரதான சாலையை மறைத்து விடுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் புகை மூட்டத்தால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.