ஏரியூரில் ஏராளமான கடைகளும், குடும்பத்தினரும் வசித்து வருகின்றனர். மேலும் அத்தியாவசிய பொருட்களை வாங்கவும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தினமும் ஏரியூர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஏரியூரில் பஸ் நிலையம், ரேஷன் கடை, வங்கி உள்ள பகுதியில் 2 குப்பை தொட்டிகளில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. மேலும் ஆங்காங்கே சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுகிறது. குப்பைகள் தினமும் அள்ளப்படுவதில்லை. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.
-விஜயகுமார், ஏரியூர்.