சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனி அருகே உள்ள அங்கன்வாடியை குப்பைகள் சூழ்ந்து இருப்பது தொடர்பாக 'தினத்தந்தி' புகார்பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட மாநகராட்சி அதிகாரிகளால் குப்பைகள் அகற்றப்பட்டு அங்கன்வாடி பராமரிக்கப்பட்டுள்ளது. விரைந்து செயல்பட்ட மாநகராட்சிக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் அப்பகுதி மக்கள் பாராட்டை தெரிவித்தனர்.