குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-07-02 15:26 GMT

கோபி கரட்டூர் ேராட்டில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு அடைந்து நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. துர்நாற்றமும் வீசி வருகிறது. மேலும் காற்று வீசும்போது குப்பை தூசி பறந்து அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களின் கண்ணில் படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு் வருகிறார்கள். அடிக்கடி விபத்துகளை சந்தித்து வருகின்றனர். பொதுமக்களும் அவதியடைந்துள்ளனர். உடனே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்