கரூர் மாவட்டம், நொய்யல் அருகே சொட்டையூர் பகுதியில் அந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வீடுகளில் உள்ள கழிவுகளையும் மற்றும் பல்வேறு கழிவுகளையும் தார்சாலை ஓரத்தில் கொட்டி வருகின்றனர். இந்த கழிவுகளை அவ்வப்போது தீ வைத்து விட்டு சென்று விடுகின்றனர். அப்போது கழிவுகளில் ஈரம் இருப்பதால் ஏராளமான புகை ஏற்பட்டு தார்சாலை வழியாக இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களும், மற்ற வாகனத்தில் செல்பவர்கள் அவதிப்பட்டு செல்கின்றனர். புகை மூட்டத்தால் அந்த பகுதியில் தார்சாலையே தெரியாமல் உள்ளது. எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.