நோய் பரவும் அபாயம்

Update: 2023-06-07 15:09 GMT

பெருந்துறை திங்களூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிழக்குபுதூர் செல்லும் ரோட்டோரத்தில் மின்சார வாரியம் அலுவலகம் அருகே குழந்தைகள் விளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அந்த வழியாக செல்லும் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. உடனே அங்கு குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்