குவிந்து கிடக்கும் சாக்கடை குப்பைகள்
அவனாசியை அடுத்து கருவலூரில் மாரியம்மன் கோவில் ரதவீதியில் சாக்கடை கால்வாயிலிருந்து எடுக்கும் கழிவுகள் ரோட்டில் அப்படியே போட்டு சென்றுவிடுகின்றனர். இதனால் துர்நாற்றம் தாங்கமுடியாமல் நடந்து செல்பவர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். பஸ் நிறுத்தம் அருகில் குப்பைகள் மண்டி கிடக்கிறது. தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் குப்பைகள் அள்ளப்படாமல் கிடப்பதால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாக வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்
சம்பத், அவினாசி 98422 86155
==============