குப்பை தொட்டிகள் வேண்டும்

Update: 2023-05-28 09:20 GMT

மேட்டுப்பாளையம் நகரில் பல இடங்களில் குப்பை தொட்டிகள் வைக்கப்படவில்லை. இதனால் குப்பைகளை பொதுமக்கள் சாலையோரத்தில் கொட்ட வேண்டிய நிலை உள்ளது. அங்கும் குப்பையை கொட்டக்கூடாது என்று அறிவுறுத்தி வருகின்றனர். இதனால் எங்கு குப்பையை கொட்டுவது என தெரியாமல் பொதுமக்கள் குழம்பி வருகின்றனர். இதனால் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே போதிய அளவில் குப்பை தொட்டிகளை வைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்