தஞ்சையை அடுத்த திருவையாறு பகுதியில் கீழதிருப்பூந்துருத்தி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவில் தெரு குளம் ஒன்று உள்ளது. தற்போது நீரின்றி வறண்டு காணப்படும் குளத்தில் குப்பைகள் அதிகளவில் கொட்டப்பட்டுள்ளன. இதனால் குளம் குப்பைகள் குவிந்து குப்பைகூளமாக மாறிவருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றவும், குளத்தை தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.