கோபி-பாரியூர் ரோட்டில் உள்ள நகராட்சி பள்ளிக்கூடத்தையொட்டி கரட்டூர் பகுதிக்கு செல்லும் ரோடு வருகிறது. அந்த ரோட்டில் ஓரமாக குப்பைகள் ஆங்காங்கே பரவியபடி குவிந்து காணப்படுகிறது. இதனால் பலத்த காற்று வீசும்போது குப்பைகளில் உள்ள தூசிகள் பறந்து அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் மீது படுகிறது. இதன் காரணமாக விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடனே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் முன்வருவார்களா?