குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2023-05-10 14:13 GMT


ஆலங்குடியில் இருந்து வலங்கைமான் செல்லும் சாலையோரத்தில் ராயபுரம் பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். குப்பைகள் தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தேங்கி உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், ஆலங்குடி.

மேலும் செய்திகள்