குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2023-05-07 11:10 GMT

மயிலாடுதுறை பகுதி வண்டிக்காரதெரு பின்பகுதியில் நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையின் இருபுறமும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால்அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக பொதுமக்கள் மூக்கை மூடியபடி அந்த வழியாக சென்று வருகின்றனர். குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும் செய்திகள்