கடலூர் தாழங்குடாவில் உள்ள புயல் பாதுகாப்பு மையம் அருகே குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு, கடும் துர்நாற்றம் வீசுகிறது. அருகில் அரசுப்பள்ளி உள்ளதால், மாணவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.