குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2022-07-22 11:24 GMT
கடலூர் மஞ்சக்குப்பம் கோட்டாட்சியர் அலுவலக சாலையில் வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டி முழுவதும் குப்பைகள் நிரம்பி வழிந்து, அதன் அருகிலேயும் குவிந்து கிடக்கிறது. அதில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. ஆகவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.

மேலும் செய்திகள்