நாகப்பட்டினம் நகராட்சி 19-வது வார்டு சிவன் கோவில் ௪ன்னதி தெருவில் அங்கன்வாடி மையம் அருகில் குப்பைகள் தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். குப்பைகள் தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தேங்கி உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், நாகை