நாமக்கல்லில் இருந்து மோகனூர் செல்லும் சாலையில் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வகுரம்பட்டி பிரிவு ரோட்டில் இருந்து சிங்கிலிபட்டி செல்லும் சாலையின் ஓரத்தில் இறைச்சி கழிவு பொருட்கள் நாள்தோறும் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் தொற்று நோய் மக்களுக்கு ஏற்படும் சூழலும் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை உடனடியாக கவனித்து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விஜயன், சிங்கிலிப்பட்டி, நாமக்கல்.