தர்மபுரி மாவட்டம் தடங்கம் மற்றும் எ.ஜெட்டிஅள்ளி ஆகிய ஊராட்சிகள் சந்திக்கும் எல்லை பகுதியில் உள்ளது அவ்வைவழி ரெயில்வேகேட். இந்த ரெயில்வேகேட் சந்திப்பில் இருந்து பெருமாள் கோவில்மேடு கிராமத்திற்கு செல்லும் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் குப்பை கழிவுகளை ரெயில்வே தண்டவாளத்தையொட்டி கொட்டி வருகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.
-ரவி, தர்மபுரி.