நெல்லிக்குப்பம் நகராட்சி 26-வது வார்டு வைடிப்பாக்கம் மற்றும் மேல்பாதிக்கு செல்லக்கூடிய பிரதான சாலை ஓரங்களில் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே சாலையோரத்தில் குப்பைகள் எரிப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.