கோபிசெட்டிபாளையம் சாமிநாதபுரத்தில் உள்ள கீரிப்பள்ளம் ஓடையையொட்டி உள்ள ரோட்டில் கோழி கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசி வருகிறது. அந்த வழியாக பள்ளிக்கூடம் செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் முதியவர்கள் மூக்கை பிடித்துக்கொண்டே செல்லும் நிலை உள்ளது. ரோட்டில் கோழி கழிவுகள், குப்பைகள் கொட்டப்படுவது தடுக்கப்படுமா?