தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் செல்லும் சாலை சமுத்திரம் ஏரி எதிரே உள்ள சாலையோரத்தில் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. குவிந்து கிடக்கும் குப்பைகளால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மூக்கை மூடியபடி செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?