சுகாதார சீர்கேடு

Update: 2023-04-09 10:23 GMT
  • whatsapp icon

திருவாரூர் மாவட்டம் விளமலில் உள்ள திருவாரூர்-மன்னார்குடி சாலையில் தியானபுரம் கூட்டுறவு நகர் பகுதியில் சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து உள்ளன. அவற்றை அடிக்கடி சிலர் தீயிட்டு கொளுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் சாலை முழுவதையும் புகை சூழ்ந்து கொள்கிறது. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் சாலையில் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். மேலும், தீயிட்டு கொளுத்துவதால் வெளியேறும் புகையினால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

மேலும் செய்திகள்