சென்னை வடபெரும்பாக்கம் அருகே கிரான்ட்லைன் கரிகாலசோழன் நகர், கட்டபொம்மன் சாலையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி எதிரில் குப்பைகள் கொட்டப்படுவது தினமும் அரங்கேறுகிறது. குப்பைகள் சேர்ந்து குப்பை கூளமாக காட்சியளிப்பதோடு அவை மொத்தமாக எரிக்கப்படுதால் காசு மாசுபடுவது தொடர்கிறது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுவாசப்பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குப்பைகள் எரிக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும்.