சென்னை சேத்துப்பட்டு டாக்டர் சந்தோஷ் சாலையில் காச நோய் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. இதையொட்டியுள்ள மின் இணைப்பு பெட்டிக்கு அருகே அழுகிய ரொட்டி துண்டுகள், மற்றும் காய்கறி கழிவுகள் போன்ற குப்பைக்கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகின்றன. இந்த கழிவுகள் அகற்றப்படாததால் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் இதன் அருகில் அரசு உரம் தயாரிக்கும் இடம் இருப்பதால் அங்கு பணிபுரிபவர்கள், மற்றும் சுற்றுபுற பகுதியில் குடியிருப்பவர்களும் கழிவுகளின் துர்நாற்றத்தால் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே காச நோய் ஆராய்ச்சி மையத்தை ஆக்கிரமித்துள்ள குப்பைகளை அகற்றுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளுமா?