தொண்டாமுத்தூர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதன் காரணமாக அங்கு வந்து செல்லும் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் முகம் சுளிக்கும் நிலை உள்ளது. மேலும் அவர்களுக்கு நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே அந்த குப்பைகளை அகற்றி அரசு மருத்துவமனையை சுத்தம் செய்ய அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.