சாலையில் பறக்கும் குப்பைகள்

Update: 2023-03-12 15:05 GMT

புதுச்சேரி நகர பகுதியில் வீடுகள், வணிக நிறுவனங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் வாகனங்கள் மூலம் குப்பைமேட்டுக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. இவ்வாறு எடுத்துச் செல்லப்படும் குப்பைகள் வலையால் மூடிஇருக்கவேண்டும். ஆனால் பல குப்பை வாகனங்களில் இதுபோல் செய்வதில்லை. இதனால் வாகனங்களில் உள்ள குப்பைகள் சாலையில் காற்றில் பறந்து, பின்னால் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்