தொற்றுநோய்பரவும் அபாயம்

Update: 2022-07-20 14:51 GMT

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலத்தில் குப்பைகள்,கோழி,ஆடு ஆகிய இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு மலைபோல் குவிந்து கிடக்கிறது.இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாழ்மங்கலம் பகுதிகளில் கொட்டப்பட்டுள்ள இறைச்சிக் கழிவுகள்,குப்பைகளை அகற்றவும், சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள் திருமருகல்

மேலும் செய்திகள்