சென்னை புழுதிவாக்கம் அறிஞர் அண்ணா பஸ் நிலையத்தில் மாநகராட்சியால் சேகரிக்கப்படும் குப்பைக்கழிவுகள் கொட்டப்படுவது வாடிக்கையாகி வருகிறது. கூடுதலாக பஸ் நிலையம், தனியார் வாகனங்கள் நிறுத்தும் இடமாகவும் மாறிவருகிறது. போக்குவரத்து துறை கவனித்து ஆக்கிரமிப்புகளை அகற்றவும், குப்பைக்கழிவுகளை பஸ் நிலையம் அருகே கொட்டாமல் இருப்பதற்கும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.