சென்னை ஈஞ்சம்பாக்கம் கங்கை அம்மன் கோவில் தெருவில் குப்பைகளும், பிளாஸ்டிக் கழிவுகளும், காய்கறி கழிவுகளும் அதிக அளவில் கொட்டப்பட்டு வருகிறது. இந்த நிலை தொடர்வதால் இப்பகுதியே அலங்கோலமாக காட்சி தருகிறது. மேலும் இந்த இடத்தை கடந்து செல்லும் பொதுமக்கள் முகம் சுழிக்கும் வகையிலும் இருக்கிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் முன்பு கழிவுகளை அகற்றிட வேண்டும்.