புதுச்சேரியில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவை அனைத்து இடங்களிலும் தாராளமாக பயன்படுத்தப்படுகிறது. புதுச்சேரி - கடலூர் சாலையில் கிருமாம்பாக்கத்தில் உள்ள ஒரு குப்பைத்தொட்டியில் பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், சுற்றுச்சூழலும் பாதிக்கும். பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.