கடலூர் மாநகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் கெடிலம் ஆற்றில் கொட்டி வருகின்றனர். மேலும் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரும் ஆற்றில் கலக்கிறது. இதனால் ஆற்று தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதுதொடர்பாக பலமுறை புகார் அளித்தும், குப்பைகள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. எனவே ஆற்றில் குப்பைகள் கொட்டுவதையும், கழிவுநீர் கலப்பதையும் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்