சுகாதார கேடு

Update: 2023-01-11 16:30 GMT

தர்மபுரி மாவட்டம் அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மெயின் கேட் அருகில் பள்ளி எதிரில் உள்ள கடைக்காரர்கள் குடியிருப்போர் குப்பைகளையும், பழைய துணிகளையும் கொட்டிவைக்கிறார்கள். இதனால் அந்த பகுதி சுகாதாரமற்று காணப்படுகிறது. பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. பேரூராட்சி குப்பைகளை அகற்றினாலும் பலமுறை சொல்லியும் மீண்டும் அதே இடத்தில் கொட்டுகிறார்கள். மாணவர்களின் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பத்மநாபன், அரூர்.

மேலும் செய்திகள்