குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2022-12-28 17:45 GMT

சேலம் சித்தனூரை அடுத்துள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகில் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. மேலும் அருகே குடியிருப்பவர்கள், வாகனங்களில் செல்வோர், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் மிகுந்த சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த குப்பைகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-மங்களம் ராஜா, வட்டமுத்தாம்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்