தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி திரு.வி.க. நகரில் தாலுகா அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் 50-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த அலுவலகத்திற்கு நாள்தோறும் பல்வேறு சான்றிதழ்கள் பெற நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.் இந்த அலுவலகம் முழுவதும் குப்பைகளாகவும், முட்புதர்கள் சூழ்ந்தும் காட்சி அளிக்கிறது. குடியிருப்புகளில் இருந்து வரும் சாக்கடை நீர் வளாகத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள், அதிகாரிகள் மூக்கை பிடித்துகொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வரவேண்டும்.
-முருகன், பாப்பிரெட்டிப்பட்டு, தர்மபுரி.