பெங்களூரு உரமாவு லட்சுமய்யா லே-அவுட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு முன்பு கடந்த சில நாட்களாக குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கிறது. ஆனால் குப்பை கழிவுகளை அள்ளி செல்ல மாநகராட்சி குப்பை வண்டி வரவில்லை. இதனால் குப்பை கழிவுகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் குடியிருப்புவாசிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடும் நிலவி வருகிறது. குடியிருப்புவாசிகள் நலன் கருதி குப்பை கழிவுகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.