கோவை குருடம்பாளையம் ஈஸ்வரன் கோவில் வீதியில் குப்பைகள் மலை போல் குவிந்து காணப்பட்டது. அதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் கடும் துர்நாற்றம் வீசியதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. அதனால் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் இதுபற்றிய செய்தி தினத்தந்தி நாளிதழில் பிரசுரமாகி இருந்தது. இதையடுத்து குப்பைகள் அகற்றப்பட்டது. அதனால் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்திக்கும் நன்றி.