மலைபோல குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள்

Update: 2022-12-07 14:39 GMT

பெங்களூரு போட்டரி டவுன் பகுதியில் பாதுகாப்பு துறைக்கு சொந்தமான ஒரு நிலம் உள்ளது. அந்த நிலத்தின் முன்பு உள்ள சாலையில் ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. அந்த அறிவிப்பு பலகையில் இப்பகுதியில் குப்பை கொட்ட தடை விதிக்கப்பட்டு உள்ளது என்று எழுதப்பட்டு உள்ளது. ஆனால் அந்த அறிவிப்பு பலகை முன்பே மக்கள் குப்பை கழிவுகளை கொட்டி செல்கின்றனர்.

இதனால் அங்கு குப்பை கழிவுகள் மலைபோல குவிந்து கிடக்கிறது. குப்பை கழிவுகளை கால்நடைகள் கிளறி சாலையில் இழுத்து போடுவதால் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. அந்த பகுதியில் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வருவார்களா?.

மேலும் செய்திகள்