புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி, எம்.ஜி.ஆர். நகரில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் இதர கழிவுகள் தெருவின் கடைசியில் உள்ள காட்டுப்பகுதியில் கொட்டப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் இவற்றை பன்றிகள் கிளறுவதால் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.