சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் விபத்து அபாயம்

Update: 2022-07-16 18:13 GMT

திருச்சி-புதுக்கோட்டை சாலையில் இருந்து பொன்மலைப்பட்டி செல்லும் சாலையில் வலதுபுறம் செல்லும் கால்வாய் கரையில் சாலையோரம் அப்பகுதியினரும், மாநகராட்சி ஊழியர்களும் குப்பைகளை கொட்டி வருகிறார்கள். தற்போது காற்று காலம் தொடங்கி அவ்வப்போது பலத்த காற்று வீசுவதால் குப்பைகள் அனைத்தும் பறந்து சாலையில் செல்லும் வாகனஓட்டிகள் முகத்தில் வந்து விழுகிறது. இதனால் அடிக்கடி அந்த பகுதியில் சிறுசிறு விபத்துகள் ஏற்படுகிறது. அத்துடன் அந்த பகுதியில் கடும் துர்நாற்றமும் வீசுகிறது. எனவே அந்த பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதை நிரந்தரமாக தடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்